வதிலை யூனியன் அலுவலகம் முற்றுகை

வத்தலக்குண்டு, செப். 11: வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்சார்பாக 30 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் தேவையை சமாளிக்க மக்கள், தண்ணீரை விலைக்கு வாங்கி நயன்படுத்தி வருகின்றனர். புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் கொதிப்படைந்து இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பிறகே அனைவரும் கலைந்து சென்றனர்.சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் மேலாக பிள்ளைகள் போல் வளர்த்த தென்னை மரங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய்களை பறித்து ஆயிரக்கணக்கில் வருமானம் பெற்று வந்தோம். ஆனால் இன்று தண்ணீர் இல்லாததால்அவற்றை வெட்டி தரத்திற்கு ஏற்றவாறு ரூ.200 முதல் ரூ.600க்கு விற்று வருகிறோம்.

Advertising
Advertising

Related Stories: