வருமானம் இழந்த விவசாயக்கூலிகள் : குறைதீர் கூட்டத்தில் குமுறலுடன் மனு

திண்டுக்கல், செப். 11: எல்லைதாண்டும் யானையால் தாண்டிக்குடியில் விவசாய கூலி வேலை பாதிக்கப்பட்டுள்ளது. யானையை வனத்திற்குள் நிரந்தரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளிகள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது சங்காரெட்டிகோட்டை. இங்கள்ள பல குடும்பங்கள் தாண்டிக்குடி எஸ்டேட் பகுதிக்கு விவசாயக்கூலி வேலைக்கு செல்வது வழக்கம். களைஎடுப்பது, காப்பி பழம் பறிப்பது உள்ளிட்ட பணிகளை தினக்கூலி அடிப்படையில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இப்பகுதி தொழிலாளர்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.பின்னர் அவர்கள் கூறுகையில், தாண்டிக்குடி எஸ்டேட் பகுதியில் ஆண்டுமுழுவதும் எங்களுக்கு வேலை இருக்கும். இங்கிருந்து தினமும் சென்று வருகிறோம். சமீபகாலமாக யானை எஸ்டேட் பகுதிகளுக்கு வருவதால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உயிர்பயத்துடனே வேலை செய்ய வேண்டியதுள்ளது. யானை பிரச்னை இருப்பதால் சில மாதம் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்கள். இதனால் எங்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. அன்றாட செலவினங்களுக்கே சிரமப்பட வேண்டியதுள்ளது. எனவே யானை பட்டாநிலங்களுக்குள் வராத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றனர். மனுவை பெற்று கொண்டு அதிகாரிகள் இதுகுறித்து வனத்துறைக்கு பரிந்துரை செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: