பழநி கோயிலில் நவராத்திரி விழா அக்.9ல் காப்புக்கட்டுதலுடன் துவக்கம்

பழநி, செப். 11: பழநி கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் மாதம் 9ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்க உள்ளது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா வரும் அக்டோபர் 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அன்றைய தினம் மதியம் உச்சிகாலத்தில் மூலவருக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து துவாரபாலகர்கள், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு காப்பு கட்டப்படும். விழா நடைபெறும் நாட்களில் பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் பக்திச்சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு உற்சவர் சின்னக்குமாரர் கொழுவில் இருப்பதால் அக்.10ம் தேதி முதல் அக்.19ம் தேதி வரை 10 நாட்களுக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. 20ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.2ம் தேதி பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும்.
Advertising
Advertising

பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை முடிக்கப்பட்டு, பராசக்திவேல் பெரியநாயகியம்மன் கோயிலுக்கு செல்வதால், சாயரட்சை பூஜை முடிந்தவுடன் பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயில் சன்னதி நடை அடைக்கப்படும். பராசக்திவேல், பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு கோதைமங்கலம் சென்று அம்பு போடுதல் முடிந்து, மீண்டும் மலைக்கோயிலுக்கு வந்த பின்பு நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories: