நிதி உதவிக்கு விண்ணப்பித்த கலைஞர்கள் அலைக்கழிப்பு

புதுச்சேரி, செப். 11:  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ராஜிவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பி

யுள்ள மனுவில் கூறிருப்பதாவது:புதுச்சேரியில் ஓவியம், இசை, நாடகம், நாட்டியம், தவில் உள்ளிட்ட கலைகளில் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்கள் நிதி உதவி கோரி ஆயிரக்கணக்கானோர் கலை பண்பாட்டுத்துறையில் கடந்த 2011ம் ஆண்டு அளித்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டப்படி வருவாய், குடியிருப்பு மற்றும் பிற சான்றிதழ் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்திருந்தனர். கலைஞர்கள் விண்ணப்பித்து 7 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டுவிட்டு தற்பொழுது அனைத்து சான்றிதழ்களையும் கேட்பது கலைஞர்களை அலைக்கழிக்க செய்வது போல் உள்ளது. அவர்கள் அளித்த விண்ணப்பத்திலேயே வருவாய்த்துறையில் கையொப்பம் வாங்கி சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் அனைத்து ஆவணங்களை கேட்பது தவறானதாகும். இதனால் சான்றிதழ் பெற மீண்டும் வருவாய்த்துறைக்கு செலல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து, அவர்கள் அளித்த சான்றிதழ்களை சரிபார்த்து விடுபட்ட ஆவணங்களை மட்டும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: