அனைத்து மருத்துவமனைகளில் மருந்தகங்கள் கணினி மயம்

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி அரசு மருந்தாளுநர் சங்க பொதுக்குழு கூட்டம் ஆந்திர மஹா சபா மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் அன்புசெல்வன் தலைமைதாங்கினார். பொதுச்செயலாளர் பிரபாத் வரவேற்றார். பொருளாளர் ஜான்மெல்ட் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசுவாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மருந்தாளுநர் சங்க காரை பிரிவு துணைத்தலைவர் உலகநாதன், செயலாளர் சிவக்குமார், அமைப்பு செயலர் விஜயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.பின்னர் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தலைமை மருந்தாளுநர் கந்தப்பன் தலைமையில் நடந்தது. இதில் தலைவராக அன்புசெல்வன் உட்பட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த ெபாதுக்குழு கூட்டத்தில், காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள மருந்தகங்களை கணினி மயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: