செப்டம்பர் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் யஷ்வந்தையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 மத்திய அரசு நிகழும் செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. எனவே, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை ஏற்பாடு செய்த தேசிய ஊட்டச்சத்து மாதம் பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறை 27ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுடெல்லி என்ஐபிபிசிடி இணை இயக்குநர் வந்தனா தப்ரா, புதுவை நலத்துறை செயலர் அலீஸ் வாஸ் மற்றும் துறை அதிகாரிகள் பங்கு பெற்றனர். இந்த பயிற்சி பட்டறையில் முன் பருவ பேறுகால கவனிப்பு, பிரசவித்த அரை மணி நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் அளித்தல், 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்டுதல், 6 மாதம் நிறைவடைந்தவுடன் தாய்ப்பாலுடன் இணை உணவு வழங்குதல், ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு, வளர்ச்சி கவனிப்பு, ஊக்குவிப்பு, பெண் கல்வி, உணவு மற்றும் சட்டப்பூர்வ திருமண வயது பற்றி கூறுதல், சுத்தம், சுகாதாரம், நுண்ணூட்டம், செறிவூட்டப்பட்ட உணவு வகைகள் உட்கொள்ளல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆலோசிக்கப்பட்டது.மேலும், செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல்வேறு துறைகள் தாய்மார்கள், குடும்ப உறுப்பினர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி, நாடகம், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நிகழ்ச்சிகள் மூலம் தாய்ப்பால் புகட்டுதலின் முக்கியத்துவம், தடுப்பூசியின் அவசியம், முக்கியத்துவம் மற்றும் தொற்றுநோய்களை வரும் முன் தவிர்த்தல் குறித்தும் விழிப்
Advertising
Advertising

புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: