பேருந்தில் ஏறிய மீனவரை கீழே இறக்கி வெட்டிய கும்பல்

காலாப்பட்டு, செப். 11:  காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் கடப்பாக்கம் அடுத்த ஆலமரத்து குப்பம் பகுதியை சேர்ந்த காத்தவராயன் மகன் ராஜீ (26), மீனவர். இவரது நண்பருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதையொட்டி, ராஜீ மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 10 பேர் கனகசெட்டிகுளத்தில் மது அருந்த வந்தனர். அங்குள்ள தனியார் மதுகடையில் மது அருந்திவிட்டு, வீட்டிற்கு செல்வதற்கான கனகசெட்டிகுளம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர்.

 அவர்களை பின்தொடர்ந்து அதே பகுதியை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் கோதண்டராமன், நாகூரான் மகன் இந்திரகுமார், செல்லமுத்து மகன் சிவனேசன், வடிவேல் மகன் முருகன் ஆகிய 4 பேரும் வந்தனர்.பின்னர், ஆலமரத்துகுப்பத்து செல்ல ராஜீயும், அவரது நண்பர்களும் பேருந்தில் ஏறினர். கோதண்டராமன் உள்ளிட்ட 4 பேரும் பேருந்தில் ஏறிய ராஜிவை கீழே இறுத்துபோட்டு தாக்கினர். இதையடுத்து ராஜீயும், அவரது நண்பர்களும் தமிழக பகுதியை நோக்கி ஓடினர். இருப்பினும், அவர்கள் விடாமல் துரத்தினர். பின்னர் ராஜீயை மடக்கி மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் ராஜீவின் முகம் மற்றும் கையை கிழித்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜீ சிகிச்சைக்காக கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Advertising
Advertising

 இதுகுறித்து ராஜீவின் நண்பர்கள் காலாப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், சம்பவம் நடந்த இடம் தமிழக பகுதி என்பதால் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளிக்குமாறு கூறினார். இதையடுத்து கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து ராஜீயிடம் விசாரணை நடத்தினர். அதில், ராஜீக்கும், கோதண்டராமன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருப்பது தெரிய வந்ததது. பின்னர் ராஜீ கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  கோதண்டராமன், இந்திரகுமார்,  சிவனேசன், முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: