செல்போன் கடையை உடைத்து திருட்டு

 முஷ்ணம் தெற்கு செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (51). இவர் முஷ்ணம் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று கடையடைப்பு போராட்டம் காரணமாக கடையை திறக்கவில்லை. இந்நிலையில் வங்கியில் பணம் எடுப்பதற்காக கடையில் வைத்திருந்த பாஸ் புத்தகத்தை எடுக்க கடையை திறக்க வந்த போது, கடையில் போடப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடையினுள் சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்களின் உதிரி பாகங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து செல்வம் முஷ்ணம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.

 

Related Stories: