திருக்கனூர், திருபுவனையில் கடையடைப்பு

திருக்கனூர், செப். 11:  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி முழுவதும் பந்த் நடத்தப்பட்டது. இதையொட்டி திருக்கனூர் கடைவீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருபுவனை: புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி முழுவதிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்து. வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Advertising
Advertising

காலாப்பட்டு: பந்த் போராட்டத்தையாட்டி காலாப்பட்டு, கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையிலிருந்து புதுவைக்கு வந்த பேருந்துகள் கனகசெட்டிகுளத்துடன் திரும்பி சென்றன. அதேபோல் புதுச்சேரியிலிருந்து கனகசெட்டிகுளம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Related Stories: