மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம்

புதுச்சேரி,  செப். 11:   புதுவை மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக் குழுவினர்  ஒருநபர் குழு சிபாரிசு அடிப்படையில் ஊழியர்கள் பெற்று

வரும் ஊதியத்தை மத்திய  அரசிடம் அனுப்பி உறுதிபடுத்துதல் வேண்டும், பதவி உயர்வு, எம்ஏசிபி, ஏசிபி  ஆகியவற்றை காலத்தோடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்  போராட்டத்தை அறிவித்துள்ளனர்.அதன்படி முதல்கட்டமாக போராட்டக்குழு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்  உண்ணாவிரதம் நடைபெற்றது. உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். பொறுப்புகுழு  ராஜேந்திரன், வேல்முருகன், மதிவாணன், உத்ராடம் உள்ளிட்ட 25க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

 

Related Stories: