நிலத்தை ஆக்கிரமித்து குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிய அவலம்

விழுப்புரம், செப். 11:  விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளையாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நான் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்துவிட்டு அரசு வேலை இல்லாத பட்சத்தில் எனக்கு பூர்வீகமான விவசாயம் நிலம் 69 சென்டில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இதனிடையே எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் அடியாட்கள், பொக்லைனுடன் வந்து என் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து எங்களை அடித்து உதைத்தனர். இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் என்னையும் என் குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க வேண்டுமென அவர்கள் முடிவு செய்து தொடர்ந்து அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மின்சாரம் துண்டிப்பு, ஊரில் உள்ளவர்களிடம் பேசக்கூடாதென தடை போன்ற பல்வேறு கட்டுப்பாட்டு என்ற முறையில் கட்டப்பஞ்சாயத்தை கூட்டி முடிவு செய்து எங்கள் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ளனர். மீறி மற்றும் எனது குடும்பத்தினர் இந்த ஊரில் இருந்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதால் நாங்கள் உயிருக்கு பயந்து கடந்த 23 நாட்களாக உறவினர் வீடான பூட்டை கிராமத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம். இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலையம், தாசில்தார் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. வருகின்ற 14ம் தேதி நடைபெறும் திருவிழாவில் நாங்கள் சாமி கும்பிடக்கூடாது என எங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: