தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு

சின்னசேலம், செப். 11:   சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைத்துறையில் நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்ய பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அவர்கள் மறு விசாரணைக்கு வருவதில்லை. அதன் பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரி

யிடம் தெரிவித்து பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. இல்லை என்றால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மனுவை கிடப்பில் போட்டு விடுகின்றனர். ஆதலால்  பாதிக்கப்பட்ட விவசாய மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினாலும் வேலை நடப்பதில்லை. இதனால் விரக்தி அடைந்த ஒரு சிலர் விஜிலென்ஸ் துறையை நாடி செல்கின்றனர்.   அதைப்போல கடந்த ஆண்டு ஆண் சர்வேயர் ஒருவர் பணம் வாங்கியபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இருப்பினும் சர்வே துறையில் ஒரு சிலர் நில அளவீடுக்கு அதிக பணம் கேட்கும் நிலை இன்னும் உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைப்போல சிறு, குறு விவசாயிகள் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட முக்கிய சான்றுகள் வழங்கும் பிரிவிலும் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை இருந்தது. இதனாலும் பலர் பாதிக்கப்பட்டனர். இதிலும் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்து பாதிக்கப்பட்ட ஒருவரின் புகார் மனுவால் அங்கு பணிபுரிந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஒருவர் விஜிலென்ஸ் போலீசாரால் பிடிபட்டார். அவர் பிடிபட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையிலும் அந்த இடத்திற்கு புதியவரை நியமிக்கவில்லை.  அந்த இடம் தற்போதுவரை காலியாகவே உள்ளது. இதனாலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த தொடர் ரெய்டு, 2 பேர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக ஏற்பட்ட பயம் காரணமாக யாரும் சரிவர பணியை பார்ப்பதில்லை என கூறப்படுகிறது. ஆகையால் சின்னசேலம் தாசில்தார் அலுவலகத்தில் நேர்மையாக அதிகாரிகள் பணியாற்றிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: