முதியவர் தற்கொலை

திண்டிவனம், செப். 11: மயிலம் முருகன் கோயில் மலை அடிவார பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் மரத்தில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்து அப்பகுதியில் சென்றவர்கள் மயிலம் போலீசிற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊர் என தெரியவில்லை. பின்னர் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஏஓ முருகன் கொடுத்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: