மூதாட்டி வங்கி கணக்கில் இருந்து 30 ஆயிரம் அபேஸ்

சங்கராபுரம், செப். 11: சங்கராபுரத்தில் போலீசார் குடியிருப்பு பகுதி உள்ளது. அங்குள்ள ஏடிஎம் மையத்திற்கு சங்கராபுரம் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் மனைவி மீனா(55) என்பவர் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுத்து கொடுக்கும்படி ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். அந்த வாலிபர் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் இல்லை என போலி கார்டை கொடுத்துள்ளார். இதையடுத்து மீனா வங்கிக்கு சென்று ஏடிஎம் கார்டை பார்த்தபோது அது போலி கார்டு என்பது தெரிந்தது. பின்னர் வங்கி கணக்கை பார்த்தபோது 30400 ரூபாய் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அங்கு பணியில் இருந்த போலீசார் ரூ.4ஆயிரம் கொடுத்தால்தான் நாங்கள் வந்து சிசிடிவி கேமராவை பார்த்து விசாரிப்போம் என தெரிவித்ததாக தெரிகிறது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: