வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் கூலித்தொழிலாளி அதிரடி கைது

திருவெண்ணெய்நல்லூர், செப். 11: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் அருள் (எ) ஆரோக்கிய அருள்தாஸ்(38). கூலிதொழிலாளி. கடந்த 2013ம் ஆண்டு அடிதடி தகராறில் இவர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ஆனால் அருள்தாஸ் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார் மாதம்பட்டில் இருந்த அருள்தாஸை பிடித்து கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: