மாற்று கட்சியினர் 3000 பேர் அமமுகவில் இணைந்தனர்

கள்ளக்குறிச்சி, செப். 11:   அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட மாற்றுகட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா கள்ளக்குறிச்சியில் நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் கோமுகிமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், மாணவரணி செயலாளர் சீனுவாசன், இளைஞரணி செயலாளர் வஜ்ஜிரவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், அமைப்பு செயலாளர் செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரபு எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் மாற்றுகட்சியினர் 3ஆயிரம் பேர் அமமுகவில் இணைந்து கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மதுசூதனன், தங்கதுரை, ராஜேந்திரன், ஜெயதுரை, மாயாவேலாயுதம், ராஜிவ்காந்தி, நகர செயலாளர்கள் நம்பி, மாரிகண்ணு, அன்புமுருகன், ராம்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு சங்கர், மாவட்ட பேரவை தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் கல்லைரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி, நகர மாணவரணி செயலாளர் கலைமகள்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: