நடைபாதையில் இருந்த இளநீர் கூடுகள் அகற்றம்

திருக்கோவிலூர், செப். 11: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவை ஓட்டி மதில் சுவர் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் இளநீர் கூடுகளை உலர்த்தும் களமாக பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை நடைபாதையில் கொட்டி உலர வைக்கப்பட்ட இளநீர் கூடுகளை அகற்றினர். மேலும் அருகே சில பகுதிகளில் உலர வைக்கப்பட்டிருந்த இளநீர் கூடுகளையும் அப்புறப்படுத்தினர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: