முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் வழங்கல்

விக்கிரவாண்டி, செப். 11: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புக்கான விண்ணப்பம் நேற்று முதல் வழங்கப்பட்டது. கல்லூரி டீன் சங்கரநாராயணன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை முதல்வர் சந்திரா, நிலைய மருத்துவ அலுவலர் க்கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து டீன் கூறுகையில், பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சாதி சான்றிதழ் நகல்களை கொடுத்து இலவசமாக பெறலாம். பொதுப் பிரிவினர் தி செகரட்டரி செலஷன் கமிட்டி, கீழ்ப்பாக்கம் சென்னை - 10 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 400 ரூபாய் வரைவோலை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். வரும் 19ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை அலுவலகத்திற்கு சென்றடைய வேண்டும் என கூறினார். இதில் நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம், ஆனந்தஜோதி உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: