தஞ்சையில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி மருந்தாளுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை,செப்.11: காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் தஞ்சையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாஸ்பரன் கோரிக்கையை விளக்கி பேசினார். காலியாக உள்ள 350க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி சிறார் திட்டத்தில் 770 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கீழ் இயங்கும் 32 மாவட்ட மருத்துவ கிடங்குளில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.

Advertising
Advertising

தலைமை மருந்தாளுநர் மருந்து கிடங்கு அலுவலர் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ குறியீட்டின்படி கூடுதல் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மோட்டார் வாகன பணிமனை மற்றும் பராமரிப்பு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாநில செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Related Stories: