ஊதியம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செப். 11: கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியம் வழங்காததை கண்டித்து நேற்று அலுவலக வாயில் முன்பு பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் விஜய்ஆரோக்கியராஜ், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பட்டத்தில் பிஎஸ்என்னல் ஒப்பந்த ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டேர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: