பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,செப்.11: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கும்பகோணத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் திமுகவில் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், கணேசன், அம்பிகாபதி, நகர செயலாளர் தமிழழகன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மிர்சாவூதீன், மாவட்ட பொது செயலாளர் அய்யப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராசாராமன், கவிதா, மதிமுக முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முல்லைவளவன், மனித நேய மக்கள் கட்சி சம்சூதீன்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: