காதலி இறந்த துக்கம் விஷம் குடித்த காதலன் சிகிச்சை பலனின்றி சாவு தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சை,செப்.11:  தஞ்சை அருகே காதலி இறந்த துக்கத்தில் விஷம் குடித்த காதலன் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.தஞ்சை அருகே மாதாக்கோட்டை ரோடு வைரம் நகரைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ்(20). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தஞ்சை அருகே மானோஜிப்பட்டி காமாட்சி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ஜெயஸ்ரீ(22). இவர் அதே கல்லூரியில் எம்காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 31ம் தேதி விக்னேஷ் ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்தபோது சில எண்களில் இருந்து அழைப்பு வந்திருந்தது. இதுபற்றி விக்னேஷ் கேட்டபோது, கோபமடைந்த ஜெயஸ்ரீ என்னை சந்தேகப்படுகிறாயா என்று கேட்டு சண்டையிட்டார். பின்னர் சமாதானம் அடைந்த இருவரும் தஞ்சை அருகே நெய்வாசல் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய்க்கு சென்றனர்.

Advertising
Advertising

அங்கு பேசிகொண்டிருந்தபோதும் இதுகுறித்து குறித்து கேட்டார். இதில் கோபமடைந்த ஜெயஸ்ரீ விக்னேஷ் கன்னத்தில் அறைந்துவிட்டு கல்லணை கால்வாயில் குதித்தார். அவரை காப்பாற்றுவதற்காக விக்னேசும் குதித்தார். ஆனால் ஜெயஸ்ரீயை காணவில்லை. விக்னேஷ் சிறிது தூரத்தில் ஆற்றின் கரையோரம் இருந்த மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டு தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இவரது சப்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் விக்னேஷை காப்பாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ உடல் தஞ்சை அருகே துறையூர் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அன்றைய தினம் முதல் சோகத்தில் காணப்பட்ட விக்னேஷ் கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று காலை இறந்தார். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: