தஞ்சை அருகே கல்லணை கால்வாயில் மூதாட்டி சடலம் மீட்பு

தஞ்சை,செப்.11: தஞ்சை அருகே ஆற்றில் மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தஞ்சை அருகே கோரிக்குளம் 20வது கண் பாலத்தில் கல்லணைக் கால்வாயில் 70 வயது நிறைந்த மூதாட்டியின் சடலம் மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் விஏஓ சங்கரிடம் தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: