லயன்ஸ் வட்டார ஆலோசனை கூட்டம்

நெல்லை, செப். 11:  லயன்ஸ் வட்டார ஆலோசனை மற்றும் கூட்டுக்கூட்டம் இலஞ்சியில் நடந்தது.லயன்ஸ் மாவட்டம் 32பி4 வட்டாரத்தை உள்ளடக்கிய குற்றாலம் விக்டரி, ஏழாயிரம் பண்ணை, சங்கரன்கோவில், சுரண்டை பிசி டவுன் லயன்ஸ் சங்கங்களின் வட்டார ஆலோசனை கூட்டம் இலஞ்சி மங்கி ரெஸ்டாரண்டில் நடந்தது. கூட்டத்துக்கு வட்டார தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார்.குற்றாலம் விக்டரி சங்க பட்டய தலைவர் டாக்டர் மூர்த்தி முன்னிலை வகித்தார். தலைவர் தெய்வநாயகம் வரவேற்றார். குருசாமி கொடிவணக்கமும் அருமை நாயகம் லயன்ஸ் வழிபாடு வாசித்தனர்.உலக அமைதிக்காக ஓரு நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது. ஜாகீர்ஹூசேன் அரிமா கோட்பாடுகளையும், முருகன் பன்னாட்டு அரிமா குறிக்கோள்களை வாசித்தனர். கணேசமூர்த்தி வட்டார தலைவரை அறிமுகம் செய்து வைத்தார். பொருளாளர்கள் செல்லச்சாமி, சங்கரசுப்பிரமணியன்,சண்முகவேலு, சங்கத்தின் நிதிநிைல குறித்து பேசினர். செயலாளர்கள் கனகராஜ்குமார், கலை செல்வன், முருகேசன்சங்கத்தின் சேவை திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினர். தலைவர்கள் தெய்வநாயகம், சங்கரசுப்பிரமணியன், கணேசன் வருங்கால திட்டங்கள் குறித்து பேசினர்.

Advertising
Advertising

பட்டயதலைவர் மூர்த்தி தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.12ஆயிரம், அரசு கல்லூரி மாணவி படிப்புக்கு ரூ.5ஆயிரம் நிதி வழங்கினார். வட்டாரதலைவர் அய்யாதுரை,ஏழாயிரம்பண்ணை செயலர் கலைசெல்வன் ரூ.2ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.கேரள வெள்ள நிவாரண நிதி வழங்கிய உறுப்பினர்கள் மூர்த்தி, கணேசமூர்த்தி, தேவராஜ் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வட்டார தலைவர் அய்யாதுரை சங்க சேவை திட்டங்களை பாராட்டி மூத்த தலைவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். சண்முக சுந்தரம், குருசாமி, அனந்த கிருஷ்ணன் பேசினர். குற்றாலம் விக்டரி சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் 4சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்லசாமி நன்றி கூறினார்.

Related Stories: