திசையன்விளையில் கட்டுமான பொறியாளர் சங்கம் துவக்கம்

திசையன்விளை, செப்.11: திசையன்விளையில் சிவில் இன்ஜீனியரிங் மற்றும் டிப்ளமோ தகுதியுடன் பணி செய்யும் உறுப்பினர்களை கொண்டு கட்டுமான பொறியாளர் சங்கம் வைகறை மண்டபத்தில் வைத்து துவங்கப்பட்டது. சங்கத்தின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ஆனந்த் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஆனந்தராஜ் செயலாளராக விக்னேஷ்வரன், பொருளாளராக தினேஷ் ராபின், துணை தலைவராக செய்யது ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் அஜித், கௌதம், தீபக், வர்க்கீஸ், சபி, குமார், ராம்குமார்,  முத்து சுரேந்தர், சுந்தரபாண்டி, சுதன், ராஜேஷ் கண்ணன், வைகுண்டராஜா, நவீன்குமார், மாரிராஜா, ஆபிரகாம், ராம்குமார் கலந்து கொண்டனர்.

Related Stories: