வெய்க்காலிபட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

நெல்லை, செப். 11: வெய்க்காலிபட்டி ஆர்சி துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்விக்டருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் அருள்விக்டருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே நெல்லையப்பபுரம் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. விழாவில் பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாளாளர் லியோ, புனித ஜோசப் உயர்நிைல பள்ளி ஆசிரியர்கள், ஆர்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: