குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடி, செப். 11:தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்தில்  நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்வான   மாற்றுத்திறனாளிகள் 27 பேருக்கு ரூ.15.93 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம்  பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். மேலும் விளாத்திக்குளம் தாலுகா, காடல்குடி கிராமத்தில் உள்ள  ஊரணியில் கணேஷ்குமார், கவின்குமார்,  கவுதம் ஆகிய மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது  குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1  லட்சத்திற்கான காசோலைகளை  வழங்கினார்.மேலும், வைகுண்டம் தாலுகா,  சிவகளை கிராமத்தைச் சார்ந்த முத்துமாரி என்பவர் கல்குவாரி நீரில் மூழ்கி  இறந்தார். அவரது தந்தையிடம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை  வழங்கினார்.

Advertising
Advertising

 மொத்தம் 31  பயனாளிகளுக்கு, ரூ.19.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 14 பயனாளிகளுக்கு  இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர்  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்,  டிஆர்ஓ வீரப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன்,  சமூக பாதுகாப்பு திட்ட தனி சப் கலெக்டர்  சங்கரநாராயணன், ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் தமிழ்செல்வி, மாற்றுத்திறானாளிகள்  நல அலுவலர் ஜெயசீலி, பயிற்சி சப் கலெக்டர்  முத்து மாதவன் மற்றும்  அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: