தூத்துக்குடி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சோபியா வாபஸ்பெற்றார்

தூத்துக்குடி, செப். 11: தூத்துக்குடி வந்த விமானத்தில் பா.ஜ.வுக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியா கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.     இதுதொடர்பாக அவருக்கும், அதே விமானத்தில் வந்த தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை போலீசார், சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதை திரும்ப வழங்கக்கோரி தூத்துக்குடி 3வது ஜேஎம் கோர்ட்டில் சோபியா மனு தாக்கல் செய்திருந்தார்.  இதனிடையே புதுக்கோட்டை போலீசார் பழைய பாஸ்போர்ட்டை சோபியாவின் தந்தையிடம் அளித்தனர். இதையடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சோபியா வாபஸ் பெற்றார்.

Advertising
Advertising

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில்  வடபாகம் எஸ்ஐ ஞானராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். இதில் வட்டகோயில் சந்திப்பு பகுதியில் தூத்துக்குடி ஹவுசிங் போர்டை சேர்ந்த கண்ணன் மகன்  மணிகண்டன் (27) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பஸ் மோதி வாலிபர் பரிதாப பலி தூத்துக்குடி  இனிகோநகரை சேர்ந்த போஸ்கோ மகன் கவுதம் (24). கடல் தொழில்  செய்து வந்த இவர், நேற்று காலை வீட்டில் இருந்து தனது தங்கையை  லயன்ஸ் டவுனில் உள்ள ஒரு பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். தெற்கு பீச் ரோட்டில் மீன்பிடிதுறைமுகம் அருகே வந்தபோது எதிரே வந்த அனல்  மின் நிலை பணியாளர் பஸ், இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கவுதம், சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 இதனிடையே விபத்தை தவிர்க்க பஸ்சை டிரைவர் திருப்பியதில்  அருகே பைக்கில் நின்று கொண்டிருந்த மெக்கானிக்கான புதியம்புத்தூரைச் சேர்ந்த  மெக்கானிக் நந்தகுமார்(20) என்பவர் மீது பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து பஸ் டிரைவர் கிருஷ்ணனிடம் (52) விசாரணை நடத்தி  வருகின்றனர்.சாலை விபத்தில் வாலிபர் சாவுதிருச்செந்தூர் அருகேயுள்ள ராணி மகராஜபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த  முருகேசன் மகன் சிவராஜகுமார் (35). திருச்செந்தூர் பந்தல்  மண்டபம் பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 4ம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கோயில்விளை  பகுதியில் வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதிவிட்டு  நிற்காமல் சென்றது.

 இதில் படுகாயமடைந்து சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில்  சரிந்து உயிருக்குப் போராடிய இவரை பார்த்தவர்கள்  குடிபோதையில் கிடப்பதாகக் கருதி கண்டுகொள்ளாமல் சென்றனர். இதனால் விடிய  விடிய உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை நேற்று அதிகாலை ரோந்து வந்த  ஊர்காவல்படையினர் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  முன்தினம் இரவு சிவராஜகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர்  இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரித்து வருகிறார். இறந்த சிவராஜகுமாருக்கு கடந்த சில  மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: