தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக முறப்பாடு சிவன் கோயில் முன் புதிய படித்துறை கட்ட வேண்டும் கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி, செப். 11: தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக முறப்பாட்டில் புதிதாக கட்டப்படும் படித்துறையை கைலாசநாதர் ஆலயம்  முன் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முறப்பாடு ஊர் மக்கள் சார்பில் காந்திமதிநாதன்  தலைமையில் தூத்துக்குடி கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:எங்கள்  ஊர் முறப்பநாடு நவகைலாயங்களில் புகழ்பெற்ற குரு ஸ்தலம் ஆகும். இங்கு இந்து  அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் கோவிலும்,  சொக்கலிங்கசுவாமி கோயில் உள்ளது. தாமிரபரணி புஷ்கர விழாவினை முன்னிட்டு  எங்கள் ஊரில் புதிதாக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து ஒரு கோயிலை உருவாக்கவும் சிலர் முடிவெடுத்து செயல்படுகிறார்கள்.

Advertising
Advertising

இதனால் எங்கள்  ஊரில் புனிதம் கெடுவதுடன் ஏற்கனவே இரு சிவாலயங்கள் உள்ள இடத்தில் 3வதாக ஒரு  ஆலயம் வேண்டாம். புதிதாக ஆலயம் அமைந்தால் எங்கள் ஊர் அமைதி கெடுவதுடன்  கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதில் கலெக்டர்  உடனே தலையிட்டு  மகாபுஷ்கர விழாவை அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் ககோயில்  நதிக்கரையில் நடத்தவும் தனியாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முயற்சிப்பதை  தடுக்க வேண்டும். மேலும் புதிதாக கட்டப்படும் படித்துறையை கைலாசநாதர் ஆலயம்  முன் கட்ட ஏற்பாடு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.  இவ்வாறு மனுவில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: