தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காந்திய சிந்தனை கருத்தரங்கு

தூத்துக்குடி, செப். 11: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காந்திய சிந்தனைகள் குறித்த கருத்தரங்கு  நடந்தது. தூத்துக்குடி  காமராஜ் கல்லூரி  நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56ன்  சார்பில்  காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்திய  சிந்தனைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு  நடந்தது.  கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார்.கருத்தரங்கில்  வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்  முகமது பிலால் பேசினார்.கருத்தரங்கில்   200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  நாட்டு  நலப் பணித்திட்ட மாணவர் தெய்வநாயகம் வரவேற்றார்.  நாட்டு நலப் பணித்திட்ட  மாணவர் சதீஷ் நன்றி கூறினார்.   கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்  பணித்திட்ட அலுவலர்கள் தேவராஜ், பொன்னுத்தாய்  செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: