மீன் வியாபாரி அடித்துக்கொலை

சென்னை: குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்து இருவர், மீன் வியாபாரியை அடித்து கொலை செய்த சம்பவம் எம்ஜிஆர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் சூளைபள்ளம் நேரு நகரை சேர்ந்தவர் நாவழியப்பன் (40). மீன் வியாபாரி. அதேபகுதியை ேசர்ந்த இவரது நண்பர்களான தங்கராஜ் (48), குமார் (40) ஆகியோர் கடந்த 6ம் தேதி மது அருந்தியுள்ளனர். பிறகு நாவழியப்பன் வீட்டிற்கு சென்று மது வாங்க பணம் கேட்டுள்ளனர். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால், பணம் கொடுத்தால்தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். அப்போது தங்கராஜ் மற்றும் குமார் இருவரும் சேர்ந்து நாவழியப்பனை கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதில் நாவழியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

தகவலறிந்த வந்த எம்ஜிஆர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாவழியப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் வழக்குபதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். மருத்துவமனையில் 4 நாட்களாக தீவிர சிகிச்ைச பெற்று வந்த நாவழியப்பன் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து, அடிதடி வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக உள்ள குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: