உணவில் மயக்க மாத்திரை கலந்து நூதன கொள்ளை சார்மினார் எக்ஸ்பிரசில் வந்த பெண்ணிடம் 60 சவரன் அபேஸ்: 2 நாட்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் பயணிகள் அச்சம்

சென்னை: சென்னை-ஆந்திரா ரயில்களில் வரும் பயணிகளுக்கு உணவில் மயக்க மாத்திரை கொடுத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு அடுத்தடுத்து 92 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு குமார். இவரது மனைவி கோமளா (65). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் செகந்திராபாத்தில் நடந்த சகோதரியின் மகள் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இருவரும், நேற்று தெலங்கானாவில் இருந்து  சென்னைக்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் குளிர்சாதன பெட்டியில் குடும்பத்துடன் திரும்பி வந்துள்ளனர். ஆந்திரா மாநிலம் ஓங்கோல்- கூடுர் இடையே ரயில் வந்து கொண்டிருக்கும்போது ரயிலில் இரவு உணவு சாப்பிடுவதற்கு ஆர்டர் எடுத்துள்ளனர்.

Advertising
Advertising

கோமளா தனக்கும் தன் கணவருக்கும் உணவு ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவை வாங்கி சாப்பிட்டவுடன் சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி உள்ளனர். அதிகாலை, ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கினர். அப்போது, திடுக்கிட்டு எழுந்த இருவரும் எங்கு இருக்கிறோம் என தெரியாமல் ரயில் நிலையத்தை பார்த்தனர். அப்போதுதான் ஏதோ ஒரு சம்பவம் நடந்தி இருப்பதை கோமலா உணர்ந்தார். உடனே, கோமளா தான் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை பார்த்தார். அது, மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் சென்ட்ரல் ரயில்வே  போலீஸ் புகார் அளித்தனர். அதில், நானும், கணவரும் தெலுங்கானவில் இருந்து ரயிலில் ஏறினோம். ரயிலில் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட உடன் இருவரும் மயங்கி விட்டோம். சென்ட்ரல் வந்த பின்புதான் இருவரும் விழித்து பார்த்தோம்.

அப்போது, நான் (கோமளா) அணிந்திருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருந்தது என கூறி உள்ளனர்.  புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கொள்ளை சம்பவம் ஆந்திரா மாநிலம் ஓங்கோல்- கூடுர் பகுதியில் நடைபெற்றதால் வழக்கை ஆந்திரா மாநிலத்திற்கு மாற்றம் செய்தனர். இதைபோல், நேற்று முன்தினம் சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பெண்ணும் சாப்பிட்டவுடன் மயங்கினார். அவரிடமும் இருந்து அடித்து 32 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: