சென்னை மாநகராட்சியின் அனைத்து துப்புரவு பணிகளையும் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது: அனைத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை

சென்னை: சென்னை மாநாகராட்சியில் துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பாக 16 ெதாழிற்சங்கங்கள் இணைந்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனிடம் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் 9, 10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம்  ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை எடுத்துள்ள ராம்கி என்ஜினியரிங் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாதாக பல நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் சென்னை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதுதொடர்பாக பொது மக்களுக்கும் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர்.இந்நிலையில், 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்லடங்களிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தற்போது தற்காலிகமாக மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில்  பணியாற்றும் ஊழியார்களை  நிரந்தர  பணியாளர்களாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: