எமிரேட்ஸ் 9.5 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 9 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த ஜானகிராம் (47) என்பவரின் சூட்கேசில் இருந்த குழந்தைகள் விளையாடும் ஒரு கார் பொம்மைக்குள் தங்க செயின் மற்றும் 2 சிறிய தங்க கட்டிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அதன் எடை 170 கிராம். இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதேபோல், நேற்று அதிகாலை 3 மணிக்கு கொழும்பில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (42) என்பவர் ஆசன வாய்க்குள் ஒரு சிறிய பாலித்தீன் பொட்டலம் 2 தங்க கட்டிகளை கடத்தி வந்தார். அதன் எடை 130 கிராம். இதையடுத்து அவரையும் சுங்க அதிகாரிககள் கைது செய்தனர். இரண்டு பேரிடம் இருந்து மொத்தம் 310 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு 9.5 லட்சம் ஆகும்.

Related Stories: