ரயில் மோதி இருவர் பலி

தாம்பரம்: ரயில் மோதி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாம்பரம் அடுத்த வண்டலூர் - ஊரப்பக்கம் ரயில் நிலையங்கள் இடையே ரயில்வே தண்டவாளம் அருகில் இரண்டு சடலங்கள் இருப்பதாக கடந்த 8ம் தேதி இரவு தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு இரண்டு ஆண் சடலம் இருந்தது. சடலங்களை மீட்ட தாம்பரம் ரயில்வே போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertising
Advertising

அதில், பலியான இருவரும் அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த அழகியமணவாளன் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (49) மற்றும் கருப்பையா (56) என்பது தெரியவந்தது. இருவரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை பார்த்துவிட்டு ஊர் திரும்பிய போது  ஊரப்பாக்கம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி பலியானதும் தெரியவந்தது.

Related Stories: