அரசுக்கு சொந்தமான 20 லட்சம் நிலம் மீட்பு

புழல்: அரசுக்கு சொந்தமான 20 லட்சம் நிலம் ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். இவர் எடப்பாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான 77 சென்ட் நிலத்தை மருத்துவனை கட்ட 1952ம் ஆண்டு தானமாக கொடுத்திருந்தார். அந்த இடத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் மாதம்தோறும் ஞயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து சிறிய மாட்டுக் கொட்டாய், கேட் அமைத்திருந்தார்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, சோழவரம் வருவாய்துறை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த கேட்களையும் மாட்டுக் கொட்டாய்களையும் அகற்றினர். மேலும், இதுபோன்று அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 20 லட்சம் என கூறப்படுகிறது.

Related Stories: