புழல் பகுதியில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

புழல்: மாதவரம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் வரும் 14ம் தேதி ஏலம் விடப்படுகிறது. சென்னை புழல், காந்தி பிரதான சாலையில் இயங்கி வரும் மாதவரம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் குவிந்துள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வரும் 14ம் தேதி காலை 11 மணியளவில் ஏலத்தில் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 1000 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 
Advertising
Advertising

பின்னர், வாகனங்களை ஏலத்தில் எடுக்கும் நபர், விற்பனை வரியாக 28 சதவீதத்தை உடனடியாக கட்டவேண்டும். வாகனத்தை ஏலத்தில் எடுக்காதவர்களுக்கு, அவர்கள் கட்டிய பதிவு தொகை அன்று மாலை திருப்பித்தரப்படும். இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள், நேற்று முதல் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் பார்வையிட மதுவிலக்கு போலீசார் அனுமதித்துள்ளனர்.

Related Stories: