பேரறிவாளன், 6 பேர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரும் 26 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஆனால் பல்வேறு சட்டச்சிக்கலை காரணம் காட்டி அவர்கள் விடுதலை நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த தடைகளை நீக்கி மாநில அரசே அவர்களின் விடுதலை குறித்து முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertising
Advertising

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூடி  ஏழு பேரையும் விடுவிக்க பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த பரிந்துரையை ஆளுநர் உடனடியாக ஏற்று ஏழு தமிழர்களின் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இனியும் அவர்கள் விடுதலைக்கு தடையாக எந்த காரணத்தையும் தேடி பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையான ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய இன்றே ஆளுநர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: