வாட்ஸ்அப்பில் பறந்த பதில்கள் இஸ்ரோ தேர்வில் ஆள் மாறாட்டம் வடமாநில வாலிபர் பிடிபட்டார்

துரைப்பாக்கம்: அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்திய விண்வெளித்துறையில்  கேட்டரிங் தொடர்பான தேர்வு துரைப்பாக்கம் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 11 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் ஒருவர் செல்போனில் பார்த்தபடி தேர்வு எழுதியுள்ளார். இதை கவனித்த தேர்வு பொறுப்பாளர், செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அதில், வினாத்தாள் போட்டோவும், அதற்கான பதில்களும் இருந்தன. உடனே, தேர்வு பொறுப்பாளர் இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் வாலிபரிடம் விசாரித்தனர்.

Advertising
Advertising

அதில், அரியானா மாநிலத்தை சேர்ந்த அஜய் (24) என்பதும், அதே மாநிலத்தை சேர்ந்த அஜய்யின் நண்பர் மணீஷ் (20) என்பவர் எழுத வேண்டிய தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அஜய் எழுதியதும் தெரிந்தது. மேலும், அஜய் தேர்வி வினாத்தாளை செல்போனில் படமெடுத்து மணீஷுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். அவர், அதற்கான பதிலை வாட்ஸ் அப்பில் அனுப்பியது தெரிந்தது. இதையடுத்து, அஜய்யை  போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மணீஷை தேடி வருகின்றனர்.

Related Stories: