சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 21 ஆண்டு சிறை

சென்னை: திருவள்ளூர் அருகே ஆடு மேய்க்கும்போது 12 வயது சிறுமியை கற்பழித்த 62 வயது முதியவருக்கு, 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த 12 வயது சிறுமி, திருவள்ளூர் அடுத்த வரதாபுரத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி இருந்தார். இவரது தாய், தந்தை இறந்து விட்டனர். சித்தி வீட்டில் இருந்த சிறுமி ஆடு மேய்த்து வந்தார். இந்நிலையில், அவள் அடிக்கடி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, சிறுமியை அருகில் உள்ள பட்டரைபெரும்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி, இதுகுறித்து கடந்த 01.07.2014 அன்று திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

Advertising
Advertising

இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், எஸ்.ஐ., ராக்கிகுமாரி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்ததில்,  அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (62) என்ற முதியவர் ஆடு மேய்க்கும்போது சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பரணிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தனலட்சுமி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி பரணிதரன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், ‘‘சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்), சிறுமியை வன்கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, குற்றவாளி ராஜ்குமாரை போலீசார் புழல் சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று அடைத்தனர்.

Related Stories: