கிளை வாய்க்காலில் தண்ணீர் பற்றாக்குறை நாற்றுவிட முடியாமல் விவசாயிகள் அவதி

வேலம்பாளையம் கிளை வாய்க்காலில் குறைந்த அளவிலேயே தண்ணீர் வருவதால் நாற்றுவிட முடியாமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.கீழ்பவானி பாசனத்திற்கு கடந்த மாதம் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கவுந்தப்பாடி கிராமத்தில் வேலம்பாளையம் கிளை வாய்க்காலில் மதகு எண் 23ல் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாற்றுவிட முடியாமல் அவதியுற்று வருகின்றனர். வாய்க்காலில் வரும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நாற்றாங்கால் அமைக்க முடியாமல் உள்ளதாகவும், அருகில் உள்ள விவசாயிகள் நாற்று நடவுக்கு தயாராகி வரும் நிலையில் நாற்றாங்கால் அமைக்க கூட முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.குறைந்த அளவில் தண்ணீர் வருவது குறித்து உதவி பொறியாளரிடம் பல முறை அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வேலம்பாளையம் கிளை வாய்க்கால் மதகு எண் 23ல் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் நாற்றாங்கால் கூட விவசாயிகளால் அமைக்க முடியவில்லை. எனவே நெல்லுக்கு பதிலாக மாற்று பயிர்களை நடவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை குறித்து பல முறை பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுப்பணித்துறையினரின் அலட்சியப்போக்கு தொடருமானால் கவுந்தப்பாடியில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Advertising
Advertising

Related Stories: