மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை

பட்டிவீரன்பட்டி, செப். 7: நத்தத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் யுவபிரபா என்ற மாணவி ஒற்றையர் பிரிவில் முதலிடமும், சௌந்தர்யா, யுவபிரபா இரட்டையர் பிரிவில் முதலிடமும் பெற்றனர்.

Advertising
Advertising

இதன்மூலம் இருவரும், மண்டல அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்று உள்ளனர். மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியர்கள் மலர்வண்ணன், தங்கமீனா ஆகியோரை பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் ராஜாராம், ஆலோசனை குழுதலைவர் மோகன் அருணாச்சலம், செயலர் வெங்கடேசன், தலைவர் பொன்பாண்டி, முதல்வர் வசந்தா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Related Stories: