நவுரோஜி, வஉசி பிறந்தநாள் விழா

திண்டுக்கல், செப். 7: திண்டுக்கல்லில் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசியப் பேரவை சார்பில் தாதாபாய்நவுரோஜி மற்றும் வஉசி ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் பாண்டியன் தலைமை வகிக்க, துணைத்தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். மாநகர் பேரவை துணைத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். இருவரது படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வஉசியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். மக்களவை மைய மண்டபத்தில் இவருக்கு சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இளைஞர் பிரிவுத்தலைவர் சஞ்சய்குமார், அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளை செய்திருந்தார். துணைத் தலைவர் தவசிநாகராஜன் நன்றி கூறினார். வத்தலக்குண்டு வெள்ளாள பெருமக்கள், தமிழ்நாடு வஉசி நலப்பேரவை சார்பாக வஉசி பிறந்தநாள் விழா நடந்தது. பேரவை மாவட்ட தலைவர் ஜெயமாணிக்கம் தலைமை வகித்தார். வஉசி படத்திற்கு மலர்தூவி வணங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.

Related Stories: