டூவீலர் விபத்தில் கால் முறிந்தது

திண்டுக்கல், செப். 7: திண்டுக்கல் பாலதிருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (39). எலக்ட்ரீசியன். நேற்று காலை நண்பர் ஒருவருடன் டூவீலரில் அமர்ந்து தாடிக்கொம்பு ரோட்டில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். வாணிவிலாஸ் சிக்னல் அருகே திரும்பிய போது எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் வெற்றிவேலின் தொடைப்பகுதி படுகாயமடைந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மதுரை ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

Related Stories: