அய்யம்பாளையம், சேவுகம்பட்டி இடையே திறந்தவெளி கிணறு பிரச்னை தீர்ந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி, செப். 7: அய்யம்பாளையம், சேவுகம்பட்டி இடையே நிலவி வந்த திறந்தவெளி கிணறுகளின் பிரச்னையில் சுமூகதீர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அய்யம்பாளையம் மருதாநதி அணையின் அடிவாரத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் சேவுகம்பட்டி பேரூராட்சியின் குடிநீர் தேவைக்காக பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து தண்ணீர் எடுத்தால் அய்யம்பாளையம் கிணற்றின் நீராதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சேவுகம்பட்டி திறந்தவெளி கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் எழுந்தது,

இதுதொடர்பாக கடந்த 1ம் தேதி திண்டுக்கல்லில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்பட்டது.
Advertising
Advertising

அதாவது அய்யம்பாளையம் திறந்தவெளி கிணற்றை இம்மாத இறுதிக்குள் ஆழப்படுத்தி கொள்வது என்றும், அதுவரை இரு பேரூராட்சிகளுக்கும் சேவுகம்பட்டி திறந்தவெளி கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்து கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் சேவுகம்பட்டி திறந்தவெளி கிணறு பயன்பாட்டிற்கு வந்தது. திறந்தவெளி கிணற்றில் சுமூக தீர்வு ஏற்பட்டதையொட்டி 2 கிராமமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: