குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

வேடசந்தூர், செப். 7: வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகிக்க, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கல்வி இடைநிறுத்தல், பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், சைல்டு லைன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இவற்றை அமைதி அறக்கட்டளை சார்பில் வேடசந்தூர் அனைத்து பள்ளிகளிலும் குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் அமைதி அறக்கட்டளை திட்ட மேலாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் பவித்ரா, நதியா, முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: