‘அழுத்தமில்லாத குடிநீர் சப்ளையால் அதிருப்தி’ மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல், செப். 7: புதிய குடிநீர் திட்டத்தில் குறைவான நீரே வருவதால் பொதுமக்கள் திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றகையிட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்டது குறிஞ்சிநகர். இங்கு 300 வீடுகளுக்கு மேல் உள்ளன. இவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய குடிநீர் திட்டத்தின்மூலம் விநியோகிக்கப்படும் என்று குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால் பழைய குடிநீர் திட்டத்தைவிட இதில் மிகக்குறைவான நீரே சப்ளை ஆகிறது. இதனால் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி நேற்று மாநகராட்சி அலுவலகத்தை இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Advertising
Advertising

புதிய குடிநீர் திட்டம் ஒவ்வொரு பகுதிக்காக விரிவுபடுத்தப்பட்டுவருகிறது. விரைவில் சரியாகும் என்று அலுவலர்கள் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘10 நாட்களுக்கு ஒருமுறை சப்ளையாகும் குடிநீரும் அரை மணிநேரம் மட்டுமே வருகிறது. பழைய திட்டத்திலாவது ஓரளவு தண்ணீர் வந்தது. குடிநீர் பற்றாக்குறையினால் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டியதுள்ளது’’ என்றனர்.

சரியில்லை ஜிக்கா

ஜப்பான் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ஜிக்கா குடிநீர் திட்டத்தில் நீர் அழுத்தமின்றி வருவதால் நகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Related Stories: