ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஒட்டன்சத்திரம், செப். 7: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் வட்டத்தில் கரியாம்பட்டி, கொ.கீரனூர், வெரியப்பூர் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நேரடியாகவும், வேலைவாய்ப்பு முதுநிலை படியும் நிரப்ப தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு 07.07.2018, 08.07.2018 மற்றும் 11.07.2018-ம் தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் வெரியப்பூர் கிராமத்திற்கு பொதுப்பிரிவினரில் முன்னுரிமையற்றோர் பிரிவினர் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

தற்போது பின்வருமாறு திருத்தி அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அரசானை நிலை எண். 21 மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு துறை (டி.ஏ.பி.3.2) நாள் 30.05.2017-ன்படி வெரியப்பூர் கிராமத்திற்கு பொதுப்பிரிவினரில் முன்னுரிமை அடிப்படையில் காது கேளாதோர்களிடமிருந்து 12.09.2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.07.2018ன்படி வயது வரம்பு - குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 21 அதிகபட்சம் (ஓ.சி. 30, எம்.பி.சி., பி.சி.32, எஸ்.சி.ஏ. எஸ்.சி., எஸ்.டி. 35) மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வயது வரம்பு சலுகைகள் பொருந்தும் என ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் லீலாரெஜினா தெரிவித்துள்ளார்.

Related Stories: