கோரிப்பாளையத்தில் குழாய் உடைந்து ஆறாய் ஓடிய கழிவுநீர்

மதுரை, செப்.7: மதுரை கோரிப்பாளையம் அருகே கழிவுநீர் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீர் குளம் போல் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பூமிக்கட்டியில் பதிக்கப்பட்டிருந்த பாதாளச்சாக்கடை குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்து வெளியேறியது. இதனால் கழிவுநீர் பீறிட்டு சாலையெங்கும் குளம் போல் தேங்கி ஆறாக ஓடியது.இதனால் அப்பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள் மீது கழிவுநீர் தெறித்தது. இதையடுத்து கோரிப்பாளையத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

குழாய் உடைந்த பகுதியைச் சுற்றி போலீசார் பேரிகாட் தடுப்பு அமைத்தனர். மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ராட்சத மண் அள்ளும் இயந்திரத்துடன் விரைந்து வந்தனர். கழிவு நீரேற்ற நிலையத்தில் இயக்கத்தை நிறுத்தினர். இதனால் கழிவுநீர் குழாயிலிருந்து வெளியேறாமல் தடைபட்டது. பின்னர் குழாயில் இருந்த உடைப்பை சரி செய்தனர். எனினும் கோரிப்பாளையம் பகுதி முழுவதும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது.

Related Stories: