நீராதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை கலெக்டர் நடராஜன் பேட்டி

மதுரை, செப். 7: மதுரை மாவட்டத்தில் நீராதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் நடராஜன் உறுதி கூறினார்.மதுரை கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவ நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீருக்கான ஆதாரங்களை தேர்வு செய்து முறையாக மக்களுக்கு வழங்கப்படும். மாடக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அங்குள்ள 30 ஏக்கருக்கு மேல் கண்மாய் ஆக்கிரமிப்பு உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மற்ற கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். குடிமரமாத்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, வரத்து கால்வாய், நீராதர அமைப்புகள் பாதுகாக்கப்படும். பள்ளிகளில் தண்ணீர் வசதி, மாணவிகளுக்கான கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய்ந்து நேரியில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: